Wednesday, 20 June 2012

"புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.

இன்று(14.06.2012) சே குவேராவின் 84 வது பிறந்த தினம்! 

"சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
என் பின்னால் வரும் தோழர்கள்
என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்.
தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்..."
என்று முழங்கியவர் சே குவேரா. அன்பினனாய் பண்பினனாய் ஒடுக்கப் படும் மக்களின் பாசக்காரனாய் விளங்கிய சே குவாரா 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்தார். ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தம் மகனை சிறந்த மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.

ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.
“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும், சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.

இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார். எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி.

"ஒரு வேளை என் போராட்டத்தில் நான் வெற்றிபெற்றால்
நானும் மக்களுடன் சேர்ந்து மகிழ்வேன், அன்றி நான் கொல்லப்பட்டால் எம் மக்களின் இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருப்பேன்." என வீர முழக்கம் இட்டவர். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்பது அவர் வரலாறு புகட்டிய உண்மை. ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் என்பதை பல அறிஞர்கள் ஏற்று போற்றி இருப்பதில் இருந்து உறுதியாக கூறமுடியும்.
. "புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.
புரட்சியின் விதைகளே கிடைக்கும்." என அவர் சொன்னதட்கமைய சோர்வுகளை துடைத்து எரிந்து எழக் கற்ற இனம் எம் தமிழ் இனம்.

விடுதலை வரலாறுகளுக்கு வழிகாட்டும் வரலாறாக திகழும் சே குவரா என்ற மாந்த நேயப் போராளி புரட்சி வீரரை விடுதலைக்காய் போரிட்டு வரும் தமிழர்களாகிய நாம் போற்றிடுவோம்!

No comments:

Post a Comment