Friday, 22 June 2012

உணர்வினை நோகடித்த ஞானி


குறிப்பு 'என்னால் முதலில் வெளியிடப்பட்டு எனது இணையம் தடைசெய்யப்பட்டதன் பின் மீண்டும் இதை வெளியிடுகிறேன்.எனது இணையம் வேறு ஒரு செய்தியால் ஏற்ப்பட்ட நிகழ்வால் தடை செய்யப்பட்டது..........

உணர்வினை நோகடித்த ஞானி


 


இந்திய ஊடகவியத்தின் போது என்,மனதில் பல மாற்றங்கள் அதில் என்னால் மறக்க முடியாத இந்த ஞானி உடனான உரையாடல் மனதில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது அவருடைய ஊடக அனுபவம் பற்றியோ அவரின் திறமைகள் பற்றியோ நான் பேசவில்லை அனால் ஈழ தமிழர்கள் மீதும தமிழீழவிடுதலை புலிகள் மீதும் அவர் முன்வைக்கும் குற்றசாட்டுக்களை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை எதையும் விமர்சன ரீதியாக பார்க்காத  அவர் அவதுறு செய்ததை என்னால் சகிக்க முடியவில்லை நான் அவர் உரையாடலை நிறுத்தி கேட்ட வினாவிற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை விடயங்களை மாற்றி மாற்றி பேசினார் அவர் சொன்ன விடயத்தில் என் மனதை பாதித்த விடயங்களில் சில அவர் கூறிய வார்த்தைகள் என்னை பாதித்தது அதில்

1தமிழ் மக்கள் தான் அதன் தலைமையை தெரிவு செய்கிறார்கள் அவர்கள் தான் அதன் பலாபலனை அனுபவிக்க வேண்டும்

2 பிரபாகரன் சர்வதிகரமனநிலையை கையில் வைத்து இருக்கிறார் மக்களை வதைத்தார்

3 நிங்கள் ஈழத்தமிழர்கள் நிங்கள் வேறு நாங்கள் வேறு உங்களுக்காக நாங்கள் ஒன்னும் கிளிக்கமுடியது

4 நிங்கள் அழிந்தபோது நாங்கள் கேள்விகேக்க முடியாது  நிங்கள் எங்கள் தலைவரை கொன்றிர்கள் (ராஜீவ்)

5 ஈழ மக்கள் எல்லோரும் புலிகள்

6 ராஜீவ் கொலைக்கு பின்னர் உங்களைப்பற்றி எழுதுவதையோ  பேசுவதியோ நிறுத்திவிட்டேன் என்றார் இதில் இருந்து அவரின் ஈழமக்கள் மீதான பார்வை உங்களுக்கு புரியும் நிறைய பேசினார் நான் உணர்சி வசப்பட்டு அழுது விட்டேன் அதன் பின்னர் என்னால் ஒன்றையும் செவிமடுக்க முடியவில்லை நான் அவரிடம் சில வினாவினை உணர்சிவசப்பட்டு கேட்டேன்



1 விடுதலை புலிகள் அப்பாவிகளை கேடயமாக பயன்படுத்துவதாக கூறுபவர்கள் பார்வைக்கு அப்பாவி தமிழர்களை சிங்களர்கள் படுத்தும் பாடு ஏன் தெரிவதில்லை என்பது எனக்கு புரிவதே இல்லை...
<



2 1987 ஆண்டு பிரச்சனைக்கு 1990 பிறகு பிறந்த எங்களை இலங்கை அரசாங்கம் கொன்றதை நிங்கள் நியாயப்படுத்துகிறிர்களா

இவை எதற்கும் அவர் சரியான பதில் தரல்ல நான் இறுதியாக கூறியது நிங்கள் எங்கள் மீதும் தமிழ்ஈழபுலிகள் மீதும் தவறான பார்வையினை கொண்டு இருக்கிறிர்கள் என்று கூறினேன் எல்லாம் முடிய அவர் சொன்னார் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று உண்மைதான் எங்கள் உணர்வினை மதிக்க தெரியாத அவர் காயம் பட்ட புண்ணில் வேலைப்பாச்சினார் இது என்போன்ற பாதிக்கப்பட்டவர்களின் உணர்வினை சீண்டி விட்டார் இந்த ஞானிக்கு சில விடயங்களை நான்

ஞாபகப்படுதுகிறேன் ஒன்றை ஞானி சரியாகப்புரிந்து கொள்ளவேண்டும்

1 புலிகள் யாருக்குப் போராடுகிறார்கள் என்கிற அடிப்படை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அப்பாவித் தமிழர்களை கேடயமாக ஆக்குகிறார்கள் என்கிற செய்திகள் எந்த அளவு உண்மை ? புலிகளும் தமிழர்கள்தானே, அவர்களே தங்கள் மக்களை ஈழ அரசுக்கு எதிராக கேடயாமப் பயன்படுத்தினால் போராட்டத்தின் நோக்கமே கொச்சைப்படுகிறது. சிங்கள அரசின் நோக்கமே இன ஒழிப்புதான், அதைத் எதிர்த்து தான் போராட்டமே நடைபெறுகிறது என்ற நிலையில் அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று சொல்வது தங்களின் இன அழிப்புக்கு தங்களே உடந்தையாக இருக்கிறார்கள், அதாவது விடுதலை புலிகள் தமிழ் இன அழிப்பிற்காக சிங்கள அரசுக்கு மறைமுகம் உதவுகிறார்கள் என்று சொல்வதைப் போன்றது. அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எனவே இது போன்ற தொரு நடவடிக்கையை புலிகள் செய்யவில்லை என்று என்னால் கூறமுடியும் ஏனெனில்


விடுதலைப் புலிகளின் நேற்றைய நடவடிக்கைகள் என்பவை நடந்து முடிந்தவை, அது பற்றிப் பேச ஒன்றும் இல்லை,என்றார் இராஜிவ் காந்தி படுகொலையை தமிழ்மண்ணில் நிகழ்த்தியது தமிழக தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பும் வருத்தம் தெரிவித்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் அழிவை கல் மனதுடன் வேடிக்கைப் பார்க்க வசதியாக 'இராஜிவின் ஆன்மாவை' கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டும், காலத்திற்கும் அதையே காரணாமாகச் சொல்லிக் கொண்டி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிசாவில் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்த திமுககாரர்கள் பழிவாங்குதல் போல் நினைத்திருந்தால் காங்கிரசுடன் எந்த காலத்திலும் கூட்டு வைத்திருக்கவே மாட்டார்கள். தன்னை ஓராண்டிற்கும் மேலாக சிறையில் வைத்திருந்தவர் ஜெ என்று கோபம் கொப்பளித்துக் கொண்டே இருந்தால் வைகோ ஜெவுடன் கூட்டணி அமைத்திருக்காமல் திமுக ஜோதியில் கலந்து மறைந்திருப்பார். வெள்ளைக்காரன் இந்தியர்களை அழித்தான் மானமுள்ள இந்தியன் எவனுமே இங்கிலாத்திற்குச் செல்லக் கூடாது வெள்ளையர்களிடம் வேலை பார்க்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால் அது அபத்தம், சொல்லுபவர் மன நிலையை சோதித்து அறிய வேண்டும்.உலகெங்கிலுமே பழையதை மறந்து கைகோர்பது என்பது நடைமுறைதான். தன் தந்தையைக் கொன்றவர்கள் என்ற நினைப்பே இருந்திருந்தால் பிரியங்கா நளினியை சந்திக்கச் சென்று இருப்பாரா?சிங்கள அரசு தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்து கொள்ளவோ, அவர்களுக்கு சம உரிமை கொடுக்கவோ கடந்த 30 ஆண்டுகளாகவும் முன்வராத நிலையில், தமிழர்களின் ஒரே நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான், புலிகளின் அடிப்படைப் போராட்டமும் தமிழர்கள் நலன் முன்னிறுத்தியதுதான் என்பதில்நம் தமிழரும் தமிழக தமிழர்கள் (பலர்) தெளிவாகவே இருக்கின்றனர்.100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக் காட்டுவார்கள்பஞ்சாபிகளின் ஓட்டுக்காக இந்திராகாந்தி படுகொலையை மறந்த காங்கிரஸ், இராஜிவ் காந்தி பற்றி என்றுமே பேசுகிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை என்பதைத் தவிர்த்து 'பாசத்தால் அவர்கள் இன்னும் இராஜிவை மறக்கவில்லை' என்றெல்லாம் பெருமையாக நினைக்க முடியவில்லை. எல்லாம் லாப நட்ட அரசியல் தான். :(மறப்போம் மன்னிப்போம் " அதுதான் மனிதனுக்கு உயர்வு, ஐயன் திருவள்ளுவர் தமிழர்களுக்கென இன்னும் கூட மாற்றியே சொல்லி இருக்கிறார்.ஞானி மனதிலும் மாற்றம்  வேண்டும்



'இன்னா செய்தாரை ஒறுத்தல்...

No comments:

Post a Comment