Friday, 22 June 2012

உணர்வினை நோகடித்த ஞானி


குறிப்பு 'என்னால் முதலில் வெளியிடப்பட்டு எனது இணையம் தடைசெய்யப்பட்டதன் பின் மீண்டும் இதை வெளியிடுகிறேன்.எனது இணையம் வேறு ஒரு செய்தியால் ஏற்ப்பட்ட நிகழ்வால் தடை செய்யப்பட்டது..........

உணர்வினை நோகடித்த ஞானி


 


இந்திய ஊடகவியத்தின் போது என்,மனதில் பல மாற்றங்கள் அதில் என்னால் மறக்க முடியாத இந்த ஞானி உடனான உரையாடல் மனதில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது அவருடைய ஊடக அனுபவம் பற்றியோ அவரின் திறமைகள் பற்றியோ நான் பேசவில்லை அனால் ஈழ தமிழர்கள் மீதும தமிழீழவிடுதலை புலிகள் மீதும் அவர் முன்வைக்கும் குற்றசாட்டுக்களை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை எதையும் விமர்சன ரீதியாக பார்க்காத  அவர் அவதுறு செய்ததை என்னால் சகிக்க முடியவில்லை நான் அவர் உரையாடலை நிறுத்தி கேட்ட வினாவிற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை விடயங்களை மாற்றி மாற்றி பேசினார் அவர் சொன்ன விடயத்தில் என் மனதை பாதித்த விடயங்களில் சில அவர் கூறிய வார்த்தைகள் என்னை பாதித்தது அதில்

1தமிழ் மக்கள் தான் அதன் தலைமையை தெரிவு செய்கிறார்கள் அவர்கள் தான் அதன் பலாபலனை அனுபவிக்க வேண்டும்

2 பிரபாகரன் சர்வதிகரமனநிலையை கையில் வைத்து இருக்கிறார் மக்களை வதைத்தார்

3 நிங்கள் ஈழத்தமிழர்கள் நிங்கள் வேறு நாங்கள் வேறு உங்களுக்காக நாங்கள் ஒன்னும் கிளிக்கமுடியது

4 நிங்கள் அழிந்தபோது நாங்கள் கேள்விகேக்க முடியாது  நிங்கள் எங்கள் தலைவரை கொன்றிர்கள் (ராஜீவ்)

5 ஈழ மக்கள் எல்லோரும் புலிகள்

6 ராஜீவ் கொலைக்கு பின்னர் உங்களைப்பற்றி எழுதுவதையோ  பேசுவதியோ நிறுத்திவிட்டேன் என்றார் இதில் இருந்து அவரின் ஈழமக்கள் மீதான பார்வை உங்களுக்கு புரியும் நிறைய பேசினார் நான் உணர்சி வசப்பட்டு அழுது விட்டேன் அதன் பின்னர் என்னால் ஒன்றையும் செவிமடுக்க முடியவில்லை நான் அவரிடம் சில வினாவினை உணர்சிவசப்பட்டு கேட்டேன்



1 விடுதலை புலிகள் அப்பாவிகளை கேடயமாக பயன்படுத்துவதாக கூறுபவர்கள் பார்வைக்கு அப்பாவி தமிழர்களை சிங்களர்கள் படுத்தும் பாடு ஏன் தெரிவதில்லை என்பது எனக்கு புரிவதே இல்லை...
<



2 1987 ஆண்டு பிரச்சனைக்கு 1990 பிறகு பிறந்த எங்களை இலங்கை அரசாங்கம் கொன்றதை நிங்கள் நியாயப்படுத்துகிறிர்களா

இவை எதற்கும் அவர் சரியான பதில் தரல்ல நான் இறுதியாக கூறியது நிங்கள் எங்கள் மீதும் தமிழ்ஈழபுலிகள் மீதும் தவறான பார்வையினை கொண்டு இருக்கிறிர்கள் என்று கூறினேன் எல்லாம் முடிய அவர் சொன்னார் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று உண்மைதான் எங்கள் உணர்வினை மதிக்க தெரியாத அவர் காயம் பட்ட புண்ணில் வேலைப்பாச்சினார் இது என்போன்ற பாதிக்கப்பட்டவர்களின் உணர்வினை சீண்டி விட்டார் இந்த ஞானிக்கு சில விடயங்களை நான்

ஞாபகப்படுதுகிறேன் ஒன்றை ஞானி சரியாகப்புரிந்து கொள்ளவேண்டும்

1 புலிகள் யாருக்குப் போராடுகிறார்கள் என்கிற அடிப்படை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அப்பாவித் தமிழர்களை கேடயமாக ஆக்குகிறார்கள் என்கிற செய்திகள் எந்த அளவு உண்மை ? புலிகளும் தமிழர்கள்தானே, அவர்களே தங்கள் மக்களை ஈழ அரசுக்கு எதிராக கேடயாமப் பயன்படுத்தினால் போராட்டத்தின் நோக்கமே கொச்சைப்படுகிறது. சிங்கள அரசின் நோக்கமே இன ஒழிப்புதான், அதைத் எதிர்த்து தான் போராட்டமே நடைபெறுகிறது என்ற நிலையில் அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று சொல்வது தங்களின் இன அழிப்புக்கு தங்களே உடந்தையாக இருக்கிறார்கள், அதாவது விடுதலை புலிகள் தமிழ் இன அழிப்பிற்காக சிங்கள அரசுக்கு மறைமுகம் உதவுகிறார்கள் என்று சொல்வதைப் போன்றது. அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எனவே இது போன்ற தொரு நடவடிக்கையை புலிகள் செய்யவில்லை என்று என்னால் கூறமுடியும் ஏனெனில்


விடுதலைப் புலிகளின் நேற்றைய நடவடிக்கைகள் என்பவை நடந்து முடிந்தவை, அது பற்றிப் பேச ஒன்றும் இல்லை,என்றார் இராஜிவ் காந்தி படுகொலையை தமிழ்மண்ணில் நிகழ்த்தியது தமிழக தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பும் வருத்தம் தெரிவித்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் அழிவை கல் மனதுடன் வேடிக்கைப் பார்க்க வசதியாக 'இராஜிவின் ஆன்மாவை' கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டும், காலத்திற்கும் அதையே காரணாமாகச் சொல்லிக் கொண்டி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிசாவில் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்த திமுககாரர்கள் பழிவாங்குதல் போல் நினைத்திருந்தால் காங்கிரசுடன் எந்த காலத்திலும் கூட்டு வைத்திருக்கவே மாட்டார்கள். தன்னை ஓராண்டிற்கும் மேலாக சிறையில் வைத்திருந்தவர் ஜெ என்று கோபம் கொப்பளித்துக் கொண்டே இருந்தால் வைகோ ஜெவுடன் கூட்டணி அமைத்திருக்காமல் திமுக ஜோதியில் கலந்து மறைந்திருப்பார். வெள்ளைக்காரன் இந்தியர்களை அழித்தான் மானமுள்ள இந்தியன் எவனுமே இங்கிலாத்திற்குச் செல்லக் கூடாது வெள்ளையர்களிடம் வேலை பார்க்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால் அது அபத்தம், சொல்லுபவர் மன நிலையை சோதித்து அறிய வேண்டும்.உலகெங்கிலுமே பழையதை மறந்து கைகோர்பது என்பது நடைமுறைதான். தன் தந்தையைக் கொன்றவர்கள் என்ற நினைப்பே இருந்திருந்தால் பிரியங்கா நளினியை சந்திக்கச் சென்று இருப்பாரா?சிங்கள அரசு தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்து கொள்ளவோ, அவர்களுக்கு சம உரிமை கொடுக்கவோ கடந்த 30 ஆண்டுகளாகவும் முன்வராத நிலையில், தமிழர்களின் ஒரே நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான், புலிகளின் அடிப்படைப் போராட்டமும் தமிழர்கள் நலன் முன்னிறுத்தியதுதான் என்பதில்நம் தமிழரும் தமிழக தமிழர்கள் (பலர்) தெளிவாகவே இருக்கின்றனர்.100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக் காட்டுவார்கள்பஞ்சாபிகளின் ஓட்டுக்காக இந்திராகாந்தி படுகொலையை மறந்த காங்கிரஸ், இராஜிவ் காந்தி பற்றி என்றுமே பேசுகிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை என்பதைத் தவிர்த்து 'பாசத்தால் அவர்கள் இன்னும் இராஜிவை மறக்கவில்லை' என்றெல்லாம் பெருமையாக நினைக்க முடியவில்லை. எல்லாம் லாப நட்ட அரசியல் தான். :(மறப்போம் மன்னிப்போம் " அதுதான் மனிதனுக்கு உயர்வு, ஐயன் திருவள்ளுவர் தமிழர்களுக்கென இன்னும் கூட மாற்றியே சொல்லி இருக்கிறார்.ஞானி மனதிலும் மாற்றம்  வேண்டும்



'இன்னா செய்தாரை ஒறுத்தல்...

Wednesday, 20 June 2012

மீண்டும் எங்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்களம்


இலங்கையை ஆட்சி செய்து வரும் ஒவ்வரு ஆட்சியாளரின் கால பகுதியிலும் தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டது வரலாறு .அந்த வகைமீண்டும் எங்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்களம் யில் தமிழர் சிங்கள மக்களால் இடி அமீன் என அழைக்க படும் மகிந்தாவின் ஆட்சி அதிகாராத்தில் சிறுபான்மை தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்கபட்டு அவர்களின் உரிமைக்காக போராடிய அமைப்பும் அழிக்க பட்டு தமிழர் இன்று சிங்களவன் காலடியில் அவன் பாடும் மகுடிக்கு தலையாட்டும் பாம்பாக மாறியுள்ளனர் .

ஆண்டாண்டு காலமாக தமது சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தற்போது பெரும் இன்னலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டுள்ளனர் . புலிகள் பலம் சிதைக்க பட்ட நிலையில் அவர்கள் போராடும் பலம் முடக்க பட்ட நிலையில் தமிழரின் இன பிரச்னைக்கு குரல் கொடுக்க உலகம் தயங்கும் வேளையில் ஆசிய நாடுகளை புதிய வல்லரசுகளை தனது பிடியிட்க்குள் வைத்து சாதூர்யமாக காய்களை நகர்த்தி வரும் மகிந்தா தற்போது தமிழர்களின் இதயம் எனவும் கலாச்சார பட்டினமும் என அழைக்க பட்ட யாழ் சீரழிந்து சின்னாபின்னாமாகின்றது . கலாச்சார சீரழிவுகள் கட்டவிழ்த்து விடபட்டு தமிழர் மத்தியில் வறுமையை புகுத்தி ஆடம்பரத்தை நுழைத்து தந்திரமாக எயிட்சை பரப்புகின்றது . மெல்ல மல்ல தமிழரை அழிக்க சிங்களம் போட்ட வலையில் வீழ்ந்துள்ள தமிழினம் அதில் இருந்து தினமும் மீள முடியாமல் சிக்கி சீரழிந்து போகின்றது .

தற்போது மகிந்த குடும்பத்தின் இறுதி நடவடிக்கையாக அவர்களின் நிதி வளங்களின் ஊடாக யாழை தமது சிங்கள மயமாக்கவும் அங்கு எதிர் வரும் தேர்தலில் மகிந்தாவிட்க்கு அதிக வாக்குகள் கிடைத்ததென்ற பெருமையை பெறவும் சிங்கள தமிழர்களிட்கிடையில் முறுகலை உருவாக்கி தமிழர்கள் சிங்களவர்களை கண்டால் அச்சத்துடன் வாழும் நிலையை தோற்றுவிக்க மகிந்தாவினால் அங்கு  குடும்பங்கள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன . அதில் இரகசியமாக தமிழர்களின் நிலங்கள் அதிக விலை கொடுத்து வாங்க பட்டுஅங்கு சிங்களவர்கள் குடியேற்ற படும் வந்தனர் .

அதன் அடுத்த கட்டமாக் தாம் அங்கு நிலை கொண்டுள்ள இடங்களை அபகரிக்கும் நடவடிக்கையினை மேட்க்கொல்கின்றனர்  இதில்  யாழில் நிலை கொண்டுள்ள படையினரின் உறவினர்கள் குடும்பங்கள் . மீண்டும் யாழில் புலிகள் மீள் எழாமல் இருபதட்க்கும் தமது பாதுகாப்பை உறுதி படுத்தவும் இவர்கள் அங்கு தமிழருடன் செறிந்து வாழ்வதால் தமக்கு பெரும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என கருதியே இந்த புதிய சிங்களவர்கள் குடியேற்ற படுகின்றனர் . இவர்களிட்கென அங்கு புதிய வீட்டு திட்டம் அமைக்க பட்டு குடியேற படவுள்ளனர் .

பசில் கோத்த பாஜாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன . வட பகுதி ஆளுநறும .எங்கள்தோழர் டக்ளசும்     பின்னால் இருந்து இந்த நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பு வழங்கி வருவது தற்போது யாழ் மக்கள் இந்த சிங்களவரின் நடவடிக்கையால் கலக்கம் அடைந்துள்ளனர் .

தமது வீடுகளிட்க்கருகில் இராணுவத்தினரின் காவல் அரண்கள் இருப்பதால்  தாம் எந்த வேளையும் இவரக்ளினால் தாகக் படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் உறைந்துள்ளனர் . இந்த தமிழரின் அவலத்தை துடைக்க புலம் பெயர் தமிழர்கள் மீண்டும் அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களை முற்றுகை இட்டு தமக்கான மாநில சுயாட்சிகளை தானும் பெற்றுவாழ அணிதிரள வேண்டும் என்பதே தற்போதைய நிலை .
 என் எனில் ஈழ தமிழர்கள் இன்றைய சூழ்நிலையில் தங்களின் கருத்தை வெளியில் சொல்ல முடியாத சூழ் நிலையில் வாழ்கிறார்கள் எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது

ஈழத்து மண்ணில் நில அபகரிப்பினால் எழும் ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு சாதாரணமானது கிடையாது. ஈழப் போராட்டம் என்பது
 நிலத்திற்கான போராட்டம். எந்த நிலத்திற்காக ஈழத் தமிழினம் போராடியதோ அந்த நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் செய்வதில்தான் இலங்கை அரசின் கவனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழும் நிலத்தை ஆக்கிரமித்து அந்நியக் குடிகளை குடியேற்றம் செய்வது என்ன நியாயம்? ஈழத் தமிழர்களின் நெஞ்சில் அடித்து வதைக்கும் நிகழ்வாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதே ஆக்கிரமிப்புப் புத்தியில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றத்தை செய்திருக்கிறது. தொடர்ந்தும் நாங்கள் பாவப்பட்ட இனமா அப்படி என்ன செய்து விட்டோம் இந்த உலகுக்கு 

"புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.

இன்று(14.06.2012) சே குவேராவின் 84 வது பிறந்த தினம்! 

"சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
என் பின்னால் வரும் தோழர்கள்
என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்.
தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்..."
என்று முழங்கியவர் சே குவேரா. அன்பினனாய் பண்பினனாய் ஒடுக்கப் படும் மக்களின் பாசக்காரனாய் விளங்கிய சே குவாரா 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்தார். ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தம் மகனை சிறந்த மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.

ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.
“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும், சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.

இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார். எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி.

"ஒரு வேளை என் போராட்டத்தில் நான் வெற்றிபெற்றால்
நானும் மக்களுடன் சேர்ந்து மகிழ்வேன், அன்றி நான் கொல்லப்பட்டால் எம் மக்களின் இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருப்பேன்." என வீர முழக்கம் இட்டவர். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்பது அவர் வரலாறு புகட்டிய உண்மை. ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் என்பதை பல அறிஞர்கள் ஏற்று போற்றி இருப்பதில் இருந்து உறுதியாக கூறமுடியும்.
. "புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.
புரட்சியின் விதைகளே கிடைக்கும்." என அவர் சொன்னதட்கமைய சோர்வுகளை துடைத்து எரிந்து எழக் கற்ற இனம் எம் தமிழ் இனம்.

விடுதலை வரலாறுகளுக்கு வழிகாட்டும் வரலாறாக திகழும் சே குவரா என்ற மாந்த நேயப் போராளி புரட்சி வீரரை விடுதலைக்காய் போரிட்டு வரும் தமிழர்களாகிய நாம் போற்றிடுவோம்!