இலங்கையை ஆட்சி செய்து வரும் ஒவ்வரு ஆட்சியாளரின் கால பகுதியிலும் தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டது வரலாறு .அந்த வகைமீண்டும் எங்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்களம் யில் தமிழர் சிங்கள மக்களால் இடி அமீன் என அழைக்க படும் மகிந்தாவின் ஆட்சி அதிகாராத்தில் சிறுபான்மை தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்கபட்டு அவர்களின் உரிமைக்காக போராடிய அமைப்பும் அழிக்க பட்டு தமிழர் இன்று சிங்களவன் காலடியில் அவன் பாடும் மகுடிக்கு தலையாட்டும் பாம்பாக மாறியுள்ளனர் .
ஆண்டாண்டு காலமாக தமது சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தற்போது பெரும் இன்னலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டுள்ளனர் . புலிகள் பலம் சிதைக்க பட்ட நிலையில் அவர்கள் போராடும் பலம் முடக்க பட்ட நிலையில் தமிழரின் இன பிரச்னைக்கு குரல் கொடுக்க உலகம் தயங்கும் வேளையில் ஆசிய நாடுகளை புதிய வல்லரசுகளை தனது பிடியிட்க்குள் வைத்து சாதூர்யமாக காய்களை நகர்த்தி வரும் மகிந்தா தற்போது தமிழர்களின் இதயம் எனவும் கலாச்சார பட்டினமும் என அழைக்க பட்ட யாழ் சீரழிந்து சின்னாபின்னாமாகின்றது . கலாச்சார சீரழிவுகள் கட்டவிழ்த்து விடபட்டு தமிழர் மத்தியில் வறுமையை புகுத்தி ஆடம்பரத்தை நுழைத்து தந்திரமாக எயிட்சை பரப்புகின்றது . மெல்ல மல்ல தமிழரை அழிக்க சிங்களம் போட்ட வலையில் வீழ்ந்துள்ள தமிழினம் அதில் இருந்து தினமும் மீள முடியாமல் சிக்கி சீரழிந்து போகின்றது .
தற்போது மகிந்த குடும்பத்தின் இறுதி நடவடிக்கையாக அவர்களின் நிதி வளங்களின் ஊடாக யாழை தமது சிங்கள மயமாக்கவும் அங்கு எதிர் வரும் தேர்தலில் மகிந்தாவிட்க்கு அதிக வாக்குகள் கிடைத்ததென்ற பெருமையை பெறவும் சிங்கள தமிழர்களிட்கிடையில் முறுகலை உருவாக்கி தமிழர்கள் சிங்களவர்களை கண்டால் அச்சத்துடன் வாழும் நிலையை தோற்றுவிக்க மகிந்தாவினால் அங்கு குடும்பங்கள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன . அதில் இரகசியமாக தமிழர்களின் நிலங்கள் அதிக விலை கொடுத்து வாங்க பட்டுஅங்கு சிங்களவர்கள் குடியேற்ற படும் வந்தனர் .
அதன் அடுத்த கட்டமாக் தாம் அங்கு நிலை கொண்டுள்ள இடங்களை அபகரிக்கும் நடவடிக்கையினை மேட்க்கொல்கின்றனர் இதில் யாழில் நிலை கொண்டுள்ள படையினரின் உறவினர்கள் குடும்பங்கள் . மீண்டும் யாழில் புலிகள் மீள் எழாமல் இருபதட்க்கும் தமது பாதுகாப்பை உறுதி படுத்தவும் இவர்கள் அங்கு தமிழருடன் செறிந்து வாழ்வதால் தமக்கு பெரும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என கருதியே இந்த புதிய சிங்களவர்கள் குடியேற்ற படுகின்றனர் . இவர்களிட்கென அங்கு புதிய வீட்டு திட்டம் அமைக்க பட்டு குடியேற படவுள்ளனர் .
பசில் கோத்த பாஜாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன . வட பகுதி ஆளுநறும .எங்கள்தோழர் டக்ளசும் பின்னால் இருந்து இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவது தற்போது யாழ் மக்கள் இந்த சிங்களவரின் நடவடிக்கையால் கலக்கம் அடைந்துள்ளனர் .
தமது வீடுகளிட்க்கருகில் இராணுவத்தினரின் காவல் அரண்கள் இருப்பதால் தாம் எந்த வேளையும் இவரக்ளினால் தாகக் படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் உறைந்துள்ளனர் . இந்த தமிழரின் அவலத்தை துடைக்க புலம் பெயர் தமிழர்கள் மீண்டும் அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களை முற்றுகை இட்டு தமக்கான மாநில சுயாட்சிகளை தானும் பெற்றுவாழ அணிதிரள வேண்டும் என்பதே தற்போதைய நிலை .
என் எனில் ஈழ தமிழர்கள் இன்றைய சூழ்நிலையில் தங்களின் கருத்தை வெளியில் சொல்ல முடியாத சூழ் நிலையில் வாழ்கிறார்கள் எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது
ஈழத்து மண்ணில் நில அபகரிப்பினால் எழும் ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு சாதாரணமானது கிடையாது. ஈழப் போராட்டம் என்பது நிலத்திற்கான போராட்டம். எந்த நிலத்திற்காக ஈழத் தமிழினம் போராடியதோ அந்த நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் செய்வதில்தான் இலங்கை அரசின் கவனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழும் நிலத்தை ஆக்கிரமித்து அந்நியக் குடிகளை குடியேற்றம் செய்வது என்ன நியாயம்? ஈழத் தமிழர்களின் நெஞ்சில் அடித்து வதைக்கும் நிகழ்வாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதே ஆக்கிரமிப்புப் புத்தியில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றத்தை செய்திருக்கிறது. தொடர்ந்தும் நாங்கள் பாவப்பட்ட இனமா அப்படி என்ன செய்து விட்டோம் இந்த உலகுக்கு
No comments:
Post a Comment