Thursday, 22 November 2012

ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள்
.
"எந்த ஒரு மனிதன் சுயநலமின்றி மக்களுக்காக போராடுகிறானோ அவனே உண்மையான தலைவன்."
- சே குவேரா

"கொரில்லா யுத்தம்
கோழையின் யுத்தம் அல்ல ...
இது மக்களின் யுத்தம் ..
அடிபட்டவன் திருப்பி அடிக்கும் யுத்தம் ..!"
- தோழர் சே குவாரா
இந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமுதாயத்தின் வாழ்விற்காக வீரகாவியமானவர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும்
சொந்தமண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு திட்ட மிட்ட முறையில் அளிக்கப்படுகின்ற தமிழ் மக்கள் தங்களின் உரிமையை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுகளை வழங்கினார்கள்
சிங்கள் பேரினவாதம் மாநில சுயட்ச்சி மாவட்ட சபை ,சமஸ்டி அட்ட்சி என்று சொல்லி உரிமைகள் அற்ற திட்டங்களை திட்டி மக்களையும் தமிழ் மிதவாத குழுக்களையும் ஏமாற்றியது எனினும் தமிழ் மக்கள் சாத்வீக முறையில் தொடர்ந்தும் போராடினார்கள்
அனால் சிங்களம் இன அழிப்பின் உச்சத்தில் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களை படிப்படியாக அபகரித்து தமிழர்கள் தங்களின் சொந்த கிராமங்களில் இருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டார்கள்
உன்ன உணவு இன்றி தங்க இடம் இன்றி அட்டு மாட்டு மந்தைகள் போல தமிழர்கள் அனாதைகளாக அலைந்தார்கள் கரணம் இன்றி கண்டகண்ட இடங்களில் நாயை சுடுவது போல சுட்டு தள்ளப்பட்டார்கள் தமிழ் பெண்கள் மனபங்கப்படுதப்பட்டு கொல்லப்பட்டார்கள்
எனவே அகிம்சை எங்களை பாதுகக்கது என புரிந்து கொண்ட தமிழ் இளைய சமுதாயம் கைகளில் ஆயுதம் எந்த தள்ள பட்டது அல்லது நிர்பந்திக்கப்பட்டு விட்டது
சிங்கள அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் வதைப்பதையும் வெலிக்கடை சிறச்சாலையில் கைதிகள் ஆக்கப்பட்டு இருந்த அப்பாவி தமிழ் இளையோர் சிங்கள பாதுகாவலர்களால் மிகவும் மிருகத்தனமான முறையில் கொலைசெய்து கொண்டது
குட்டிமணி ,தங்கதுரை போன்றவர்களில் ரெதத்தில் சிங்களம் மிதந்தது கொழும்பில் தமிழர்களின் வீடுகள் கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டன
நடு விதியில் மக்கள் உயிர் ஓடு எரிக்கப்பட்டார்கள் பெண்களின் கற்ப்பு சுரையடப்பட்ட்து ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் ஆக்கப்பட்டார்கள்
இந்த முடிவினை கண்டு ஈழ விடுதலையே ஒரே தீர்வு என்ற நிலைக்கு தமிழர்கள் வந்தார்கள்
ஈழ தமிழ் இனத்தின் அகிம்சையின் தந்தை செல்வா ஈழமக்களுக்கு தனி நாடே தீர்வு என்று அறிவித்தார்
மீண்டும் ஒரு முறை கொழும்பில் வைத்து 1972 இல் தமிழ் மக்கள் கைகளில் ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு வழி இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் அறிவித்தார்
இந்த நேரத்தில் ஈழத்தில் பல ஈழ விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன அனால் அவை எல்லாம் பின்னலில் அரச கைக்கூலிகள் ஆனது எல்லோரும் அறிந்தது
இருந்தும் உறுதியான கொள்கையும் ,தளம்பாத தலைமையும் ,தமிழ் ஈழ விடுதலைக்காய் தம்மை முழுமையாக அற்பணிக்கும்  கொரில்லா படையணியை கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் இது சாத்தியம் என்பதை உணர்ந்து ஆயியிரம் ஆயிரம் இளைஞர் யுவதிகள் தங்களை இணைத்து கொண்டார்கள்....
ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்....
அந்த நினைவுகளையும் அவர்களின் உணர்வுகளையும் நினைவு கூறுவதற்க்கு கார்த்திகை மாதம்  தமிழர்களினால் நினைவு கூறப்படுகின்றது
2009 வரை ஈழவிடுதலை புலிகளினால் இது உணர்வு புர்வமாக நினைவு கூறப்பட்டது
அனால் இந்த 2009 பிற்பாடு தமிழர்கள் தந்தையை இழந்த குடும்பம் போல் சிதைவடைந்து போயுள்ளது தமிழர்களை ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி எமது இலச்சிய பாதையை நோக்கி வழிநடதகூடிய எந்த ஒரு தலைமைப்பிடமும் உருவாகவில்லை
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தங்களின் உறவுகளையும் உடமைகளையும் பாதுகாத்து கொண்டு புலம்பெயர் தேசங்களுக்கு தப்பி போனவர்கள் இன்று தம்மை தளபதிகள் தேச பற்றாளர்கள் என்று கட்டிக்கொண்டு புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் உழைப்பில் தேச நிதிர்மனதிட்க்காக சேர்க்கப்பட்ட நிதியில் வாழ்ந்து கொண்டு விடுதலை பற்றி பேசுகின்றனர்...உணர்வுகள் அற்ற யடங்கள் தமிழீழ உணர்வினை குறு போட்டு விற்று வருகின்றனர்
தேச நலனுக்காக ஒருமித்த தமிழ் மக்களின் உரிமைக்காக மண்ணின் விடிவிற்காக மடிந்து போன வீரர்களின் உணர்வுகள் கூட உங்களை தண்டிக்கும்

ஈழ மண் சிந்திய குருதி இன்னும் ஆறவில்லை அதற்கான மருந்துகள் நிவாரணங்கள் இன்னும் கிடைக்கவில்லை நிங்கள் புண்ணுக்கு மருந்து போடா முனையவில்லை இன்னும் வடுக்களை உருவைக அத்திவாரம் போடுகிறிர்கள்....
எமது தலைமைத்துவம் வலுவாக இருந்த காலத்தில் எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடுயார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.இன்று புலம்பெயர் நாடுகளின் ஓற்றுமை இன்மை உருத்திர குமாரன் ஒரு அணியாகவும் உலகதமிழர் பேரவை இன்னோர்  அணியாகவும் உள்ளது அங்குதான் இப்படி என்றாலும் ஈழத்தில் தமிழர்களின் ஒரே நிலைப்பாடு கொண்ட கட்சியான தமிழ் தேசிய கட்சிக்குள்ளும் ஒற்றுமை இல்லை சம்பந்தனுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கருது ஒற்றுமை இல்லை பதவி அசை தலைவிரித்து ஆட்டுகின்றது இவர்களைஉள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!என்ற கருத்தை எடுத்து கொண்டால் சரி
அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோஅதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும்ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாககருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது..மக்கள் எதை நம்புவது எதை விடுவது என்று தெரியாமல் உள்ளனர் 
எமது வரலாற்றில்  சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் வலிந்த கலாச்சார சிரழிவு சிங்கள நில அபகரிப்பு என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள்
வலுவில் நாங்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப் பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கிறது...இதற்க்கு சரியான தீர்வு எட்டப்படவேண்டும்

தாயகத்தில் நாம் கால் வைக்கும் ஒவ்வரு இடமும் எங்கள் சகோதர சகோதிரிகளின் தியாகங்களும் புததைந்து உள்ளது அவர்களின் உணர்வுகளும் தியாகங்களும் எம்மை தினம் தினம் உருகவைகிறது 30 வருட கால சிங்கள இனவாதத்தின் பிடியில் இருந்து விடுபட போராடிய இனம் இன்று பெரும் விலையை கொடுத்து அறுவடை இல்லாமல் இருக்கிறது...
புலம்பெயர் தேசங்களில் விடுதலை புலிகளின் தியாகங்களை விலைபேசும் சமுதாய வியாபாரிகள் தங்களை தேச அபிமானிகள் என்று கட்டி கொள்வதற்க்கு பல நிகழ்வுகளை அரங்கேற்றி வருகின்றனர்
இந்த மாதம் எமது வீரர்களின் நினைவுகள் அனுச்டிக்கபடும் மாதம் ஆகும் இதைகூட இரண்டு தரப்பாக மேட்கொல்வதட்க்கு முனைப்பு கட்டி வருகின்றனர் இது தங்களின் பிள்ளைகளை தேச மண்ணிட்க்காய் விதைத்த எத்தனையோ பெற்றோர்களின் துன்பத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் முனைப்பாடு ஆகும் இவை எல்லாம் மாறவேண்டும் எங்களை அழிப்பதற்க்கு எவ்வாறு இனவாத அரசு ஒன்ருபட்டதோ நாமும் அவர்களை எதிர்பதட்க்கு ஒன்று பட வேண்டும்

கடந்தகால தவறுகளை மனகசப்புக்களை விடுத்தது எல்லா தமிழ் தலைவர்களும் ஒன்று பட வேண்டும் அப்பொழுதுதான் எங்களின் துயரங்களுக்கு தீர்வு காண முடியும்...
எமக்காக எம் இன விடுதலைக்காக மடிந்து போன ஆயிரமாயிரம் வீரர்களின் நினைவுகள் என்றுமே போற்றப்பட வேண்டியவை...
ஒவ்வரு வீரனும் தன இறப்பிட்க்கு பின்னால் தமிழ் ஈழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இறந்து போனவர்கள் 12 நாட்கள் பசிகிடந்து தன உயிரை மெழுகுவர்த்தி போல உருக்கி உருக்கி மரணித்த தீலிபனை பாருங்கள் தான் வெடிக்கவைக்கும் மனிதவேடிகுண்டுடன் ஈழம் விடிந்து விடும் என நினைத்து தன மரணத்திற்க்கு நேரம் குறித்து போன மில்லரை பாருங்கள்...எதனை தியாகங்கள் ஒன்ற இரண்டா சொல்ல முடியாதவை
எப்பொழுதும் நினைத்தாலும் நெஞ்ட்சம் வெடித்து விடும் நினைவுகள்
இன்னும் சிங்கள இனவாதம் தன் போக்கில் இருந்து மாறவே இல்லை நாங்கள் முள்ளிவைக்கால்  வரை ஓடி ஓடி மாண்டு போனதை எந்த உலகமும் கண்டு கொள்ள வில்லை...எங்களின் சாபக்கேடுகள் திரவே இல்லை.............

"புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”
-- தோழர் சே குவேரா

No comments:

Post a Comment