Monday, 22 October 2012

சீமானை தூற்றி ராயவை போற்றும் கனேடிய ஊடகங்கள்.....

இன்று ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி ஊடகங்கள் சந்தர்ப்பவாத அரசியலையும் தன்நலன் சார்ந்த அரசியலையும் முதன்மை படுத்துகிறது....அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழுகின்ற தேசம் ஆகிய கனடாவில் இளைய ராயவின் இசைப்பயணம் நடைபெற இருக்கிறது இதை ஆதரித்து சில ஊடகமும் எதிர்த்து சில ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு கொண்டு இருக்கின்றன..பொதுவாக ஈழத்தமிழர் தமிழ் நாட்டிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி ஒரு வியாபார மார்க்கமாக பர்க்கபடுகிரர்கள் போலும்...அண்மையில் கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையான சுதந்திரன் வாரமலரை பார்க்க முடிந்தது...அது இளைய ராயவின் இசைபயனத்தின் ஒரு விளம்பர பத்திரிகை என்பது ஒரு புறம் இருக்க அது தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஈழ விடயத்தை மேடைபோட்டு கூவி வந்த நாம் தமிழர் கட்சியின் சீமானை கேலி செய்யும் ஒரு கட்டுரை அதன் தலையங்கம் இவ்வாறு அமைந்து இருந்தது 

"ஒ ரசிக்கும் சீமானே வா! ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்"......... எழுதி இருந்தவர் மாமுலன் (இவர் யாரிடம் வாங்கினார் என்பது எனக்கு தெரியாது) ஒரு பத்திரிகையில் என்ன எழுதகுடதோ அது எல்லாம் எழுதப்பட்டு இருந்தது...இங்கே நாம் இளையராவின் இசை நிகழ்ச்சி நடக்கணுமா வேண்டாமா என்பது அல்ல என்னுடைய கருத்து சீமானை விமர்சிப்பதற்க்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல எனது வாதம்...

சிங்கள இனவெறி அரசின் கொடூரமான இனவெறி ஆட்டத்தை மறந்து உங்களால் இசைநிகழ்ச்சி நடத்தமுடிகிறது இப்படி ஒரு நெஞ்சு தைரியம் உங்களைபோன்ற கேடுகெட்ட வர்களுக்கே உண்டு...அதுவும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலப்பகுதியில் நிங்கள் ஒவ்வரு வீடாக சென்று சேர்த்தபணமாக கூட இருக்கலாம் அது வேறகதை சரி ....மாவீரர் வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்கப்படலாம் என்று சீமான் சொன்னது உங்களின் வியாபாரத்தை பாதித்து இருக்கலாம் அதற்காக ஒரு தமிழ் நாட்டின் உயர்ந்த இடத்தில இருப்பவரையும் ஈழவிடயதிட்க்காக தொண்டை கிழிய கதுபவரையும் நிங்கள் எதற்க்கு வம்புக்கு இழுக்கணும்.....

ஈழநாட்டில் எத்தனையோ காட்டி கொடுப்புக்கள்..எட்டப்பர்கள் இருக்கையில் தமிழ் நாட்டில் ஒருதமிழன் அவரை விமர்சிப்பதற்க்கு உங்களுக்கு அருகதை இல்லை மாமுலன் நிங்கள் உங்களை நிங்களே இன்னொரு சிங்கள ஆதரவாளன் என்பதை வெளிப்படியாக காட்டி கொள்கிறிர்கள் இன்று எமது இழிவிக்கும் அளிவிட்க்கும் தமிழ் ஊடகங்களே முதன்மையனவை..சரி மாமுலன் அவர்களே நிங்கள் குறிப்பிடுவது போன்று சீமான் ஈழத்தமிழ் மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய போது நிங்கள் எங்கு சென்றிர்கள்.....புலம்பெயர் ஊடகமே
40,000 மேற்பட்ட மாவீரர்களையும், 200,000 மேற்பட்ட எம்சொந்தங்களையும் இழந்த வலி இன்னும் தீரவில்லை.நீதியும் கிடைக்கவில்லை. வாழவழிதெரியாமல் வாடும்எம்தாய்மார்க்கு இன்னும் விடிவுகிடைக்கவில்லை.
இவர்களுக்காகவாவது நவம்பர் மாதத்தை நம்மால் அர்ப்பணிக்கமுடியாதா?
எமக்காக எம் தொப்பூழ்கொடி உறவு செந்தமிழன் சீமான் குரல்கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட நாம் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.ஒருசிலரின் சுயநலத்திற்காக, அவர்களின் பணப்பெட்டியை நிரப்ப நாம் உடந்தையாக இருக்கலாமா?இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறிர்கள் சீமான் பற்றிய உங்களின் எதிர்ப்பு எதற்க்கு இப்பொழுது வரவேண்டும்....இளையரையவை எதிர்ததட்க்க அல்ல உங்களின் வியாபாரம் தடைப்பட்டதட்க்காகவா...அல்லது சீமான் விட்ட இந்த அறிக்கையில் என்ன தப்பு...
கார்த்திகை மாதம் எமது புனித மாதம்.கார்த்திகை மாதம் என்றாலே அது, எம் மண்ணுக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி,அவர்தம் கனவை நனவாக்க நாம் உறுதி பூணும் மாதம்.இது ஈழ மக்கள் யாவரும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கும் மாதம் என்பது யாவரும் அறிந்த செய்திதான். அது உங்களைபோன்ற ஊடக விட்ப்பன்னர்களுக்கு தெரியாமல் இருக்க தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை தான்...இதில் சிங்கள அரசின் எதோ ஒரு சக்தி உங்களை இயக்குகின்றது என்பதில் சந்திகமே இல்லை என் எனில்
 ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல முயட்ச்சிகள் மேட்க்கொள்ளப்பட்டு வருகின்றது அதுவும் விடுதலையின் பெயரால் இயங்கும் ஊடகங்களின் அனுசரணையுடன் விடுதலையின் பெயரால் பணம் சேர்த்து கடை கட்டியவர்களும் ஊடகங்களை இயக்கியவர்களும் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின்னால் அத்தனையையும் தங்களின் பெயருக்கு மாற்றியவர்களும் இவர்கள் தான்...ஊடகம் என்று உங்களை சொல்கின்ற நிங்கள் ஈழ விடயங்களை உங்களின் முலமாக அறிய துடிக்கும் 
மக்களுக்கு உண்மைகளைச் சொல்லாத ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் உரிமை பற்றி பேசும் அரசியல் மக்கள் விரோதமானது. இது மக்களுக்கான உரிமையை மறுப்பதை, ஊடகவியலாளனின் உரிமையாக சித்தரிப்பதாகும்.   ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் சார்பு நிலைப்பாடு, மக்களைச் சாராது  நிக்கிறது , இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தவேண்டும்.........
.
பொதுவாக கண்டனங்கள் என்பது, மக்களைச் சார்ந்ததாக அதன் முழுமையான பக்கத்தை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்;. இதுவல்லாத கண்டனங்கள், சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிழையாக வழிகாட்டி இட்டுச் செல்வதாகும். மக்கள் விரோதிகளுக்கு இடையிலான மோதலையும், அதன் வெளிப்பாடுகளையும் அதற்கு எதிராக முன்னிறுத்த வேண்டும். ஒன்றை புரட்சியின் அங்கமாக ஊடக சுதந்திரத்துக்கு சவாலாகக் காட்டுவது அதைத் திரிப்பதாகும்.....இதை முதலில் சந்தர்ப்பவாதம் பேசும் புலத்து ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறான ஊடகங்களை மக்கள் அங்கீகரிக்கவும் கூடாது..
மக்கள் மயப்பட்ட விடுதலைப் பயணம் ஒன்றில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். அதே போன்றே சமூகத்தின் ஒரு அங்கமாகிய ஊடகர்களின் பங்களிப்பும் அதில் அடங்கும்.

ஆனாலும் ஊடகர்களின் பங்களிப்பு ஏனைய பலரின் பங்களிப்புக்களை விடவும் சற்று தூக்கலாகத் தெரிவதை மறுத்து விட முடியாது. அது ஊடகர்கள் ஆற்றிய பங்களிப்பை மாத்திரம் பொறுத்ததல்ல. மாறாக அவர்கள் பணியாற்றும் தளங்களையும், அவர்களின் பங்களிப்பினால் ஏற்படும் விளைவுகளையும் பொறுத்தது.இதில் பத்திரிகையில் ஒரு கட்டுடை வெளிவருகிறது என்றால் அது பிரதான ஆசிரியரின் அனுமதியுடன் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அகவே இன்று புலத்து ஊடகங்கள் தமிழ் தேசியத்தை விலைபேசி விற்ப்பனை செய்கின்றன...என்பது தெளிவு

உண்மையில் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திலும் ஊடகர்களின் பங்களிப்பு சிலாகிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. பல ஊடகர்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமற்போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் பேனாவை மாத்திரமன்றி துப்பாக்கிகளையும் கூட ஆயதங்களாக ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சிலர் மௌனிகளாக ஆக்கப்பட்டுள்ள அதேவேளை பெரும் எண்ணிக்கையானோர் நாட்டைவிட்டே தப்பியோடுமாறும் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

போராட்டத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி போராட்டத்திற்கு எதிராகக் கூட ஊடகவியலாளர்கள் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாக இருந்து பின்னாளில் போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாறியவர்களையும் கூட எம்மால் பார்க்க முடிகின்றது.இவர்களைப்போல்
புலிகள் மக்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் இப்போதைய நிலை, அதற்கு நேர்மாறாக இருக் கிறது. முன்னாள் விடுதலைப் புலிகள் நிராதரவாக விடப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகுவது தங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். மறுபுறம் அரச உள வாளிகளின் இடைவிடாத கண்காணிப்பும் அவர்களைத் துரத்துகிறது. அவர்களுக்கு வேலை இல்லை, வருமானம் இல
்லை, தொழில் இல்லை, வீடு இல்லை, குடும்பம் இல்லை. உறுப்புகளை இழந்தவர்களும் காயம்பட்டவர்களும் அதற்கான சிகிச்சைக்குக்கூடப் பணம் இன்றி இன்றும் தத்தளிக்கின்றனர். பலருக்கு மூன்று வேளை உணவே சிக்கல்.
அனால் உங்களுக்கு மிகப்பெரிய இசைநிகழ்ச்சியை நடதுவதட்க்கு ஆதரவான கட்டுரைகள் வேறு அதில் சீமானுக்கு எதிரான கருத்துக்கள் வேறு நிங்கள் உங்களின் வேலையை சரிவர செய்தால் இன்னொர்வன் எண்களின் விடயத்தில் முக்கை நுளைக்கமாட்டான்..
ஊடகங்கள்( புலம்பெயர்) தாம் மக்களுக்கு எதிராக செய்ததை நியாயப்படுத்துகின்றதும், மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர். மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே. அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின் செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.ஈழவிடிவிட்க்காக மடிந்து போன எத்தனையோ ஊடகவியல்யாலர்களின் தியாகங்களை இவர்கள் மசுபடுதுகின்றனர்....தொடந்தும் ஈழ மக்களின் துயரங்களை விலைபேசி வில்லுங்கள்...துயரமான நாட்களில் களியாட்டங்களை நடத்துங்கள் நிங்கள் ஊடக வியாபாரிகள் தானே....

1 comment:

  1. emathu inaiya thalathittku oru eela oodakaviyalaalar thevaiyaka irukinrathu emayhu inayam franceil irunthu iyanki vrukirathu srithu kaalamaaka emathu inaiya thalathil seithikalai veliyida mudiyavillai naanum puliyankoodal thaan
    contact:tamileelathayakam@gmail.com
    www.eelathayakam.com

    ReplyDelete