Monday, 17 September 2012

புளியங்கூடல் மகாமாரி கல்வி நிலையம் ஒளிமயமாகும் எமது ஊரின் எதிர்காலம்........

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை" என்கிறார் வள்ளுவர்.
........






பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள். அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.அது போலவே கல்வியும் எனலாம் ...


வரலாற்றால் மறக்கடிக்கப்படுகின்ற மழுங்கடிக்கப்படுகின்ற ஓர் இனமாக நான் இருக்கிறோம் எமக்கான பல தடயங்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம் எப்பொழுதும் எங்கு சென்றாலும் எமது ஊரை எங்களால் மறந்து விட முடியாது எங்கள் ஊர் விடயங்களை தேடிபிடித்து அறிகிறோம் ஊரவன் ஒருவன் புகழ் அடைந்தால் நாமும் பெருமை கொள்கிறோம் ...எல்லாம் அந்த ஊரை விட்டு வந்ததன் பின்னரே எமக்கு அதன் உணர்வு புரிகிறது எல்லா மனிதர்களுக்கும் தாம் பிறந்த ஊருக்கு எதாவது செய்யணும் என்ற எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்கும் அனால் அதற்க்கான வாய்ப்புக்கள் வருவது இல்லை பொதுவாக இன்று எமது ஊரின் பல தேவைகள் புலம் பெயர்ந்த சமுகத்தால் செய்யப்பட்டு வருகிறது ..மிகவும் பாராட்டத்தக்க விடயம்.....நான் பெற்று கொள்ள முடியாததை இன்னொருவன் என் முலமாக பெற்றுக்கொள்ளும் போது வருகின்ற சந்தோசம் ஒரு தனி தான் என்பார்கள் இன்று புளியங்கூடல் மண்ணின் பெருமை பெரிது....உம்மையில்

ஊரும், உறவும் என்றும் எம் எண்ணத்தில் இருந்து அழிக்கமுடியாத ஒன்று என நான் திடமாகக் கூறுவேன். இதனால் ஊரில் வாழ்ந்தவர்கள்,வாழ்பவர்கள் எல்லோரையும் சமமாக எந்தவித தகுதி எற்றத்தாழ்வுகள் இல்லாமல் எமது ஊரின் வளர்ச்சிக்கும்,பொருளாதார மேம்பாட்டிற்கும் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ தம்மை அற்பணித்த மக்களை நாம் வாழும்காலத்தில்  நினைவு படுத்தி பார்க்க வேண்டியது அவசியம் ....2009 ஆண்டில் தொடங்கப்பட்ட புளியங்கூடல் மகாமாரி கல்வி நிலையம் இன்று ஊரில் பல படித்த சந்ததியை உருவாக்கி கொண்டு இருக்கிறது 


அன்னச் சத்திரங்கள் ஆயிரம் கட்டி பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பதை விட ஓர் ஏழைக்கு கல்வி அளிப்பது தான் தானத்திலேயே மிக உயர்ந்த தானம் என்கிறது தமிழ் மூதுரை.
ஆனால், வணிக யுகமாகிப் போன இந்த காலக் கட்டத்தில், கல்வியை இலவசமாக கற்றுத்தர எவரும் முன்வருவதில்லை. அதனால், இந்த காலத்தில் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு உயர் கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அவர்களுக்கு நாட்டின் முக உயரிய பணிகளாக கருதப்படும் எதுவும் கிடைக்கப் பெறுவதில்லை என்பது ஒருபுறம் இருக்க புலம்பெயர் தேசத்தில் இருட்டில் வாழும் எம் உறவுகள் சிலரால் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த கல்வி நிலையம் எமது ஊரை சேந்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் பெரும்பாலனவர்கள் வாழ்கிறார்கள் அனால் ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று நான்கு வருடங்கள் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது இந்த கல்வி நிலையம் புளியங்கூடல் முன்னர் நெசவு இருந்த இடத்தில இப்போது இயங்கி வருகின்றது.....ஆனால் ஊரில் இவ்வாறான நல்ல விடயம் இடம் பெறுவது நம் ஊரை செந்தவர்களுக்கு பலபேருக்கு தெரியாது எனலாம்

 “சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்”இந்த புலம்பெயர் தேசத்தில்

 எங்களால் எதாவது நாம் பிறந்த மண்ணுக்கு ஒரு சிறு துளியினும் செய்ய முடிந்தால் பெருமையே புலம்பெயர் தேசங்களின் எங்களின் அடையாளங்கள் தொலைத்து விட்டோம் ....வெளிநாடு போனதும் எங்களை மறந்து விட்டான் எனும் ஊரில் இருக்கும் உறவுகளின் வசைபாடு வேறு இதைனைக்கும் அவர்களுக்கு தெரிமா அடுத்த தெருவில் இருக்கும் அக்காவை பார்க்க முடியவில்ல ஏன் என் பிள்ளையை கூட பார்க்க முடியவில்லை என்கிறார் ஒரு புலம்பெயர் தேசத்தவர் இதுக்க எங்க நாம ஊரை சிந்திக்கிறது என்கிறார்.......உண்மைதான் கடும் குளிரிலும் இடுட்டுக்குள் வேலைக்குபோய் இருட்டுக்குள் வருகிறோம் என்கிறார்....இது எங்க புரியப்போது அங்க உள்ளவங்களுக்கு என்கிறார் உண்மைதான் என்னும் இவ்வாறன செயட்படு எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது மகாமாரி கல்வி நிலையத்தில் அனைத்து பாடங்களும் கட்ப்பிக்கபடுகின்றது தரமான ஆசான்கள் முலம்....கனடாவில் உள்ள எமது ஊரை சேர்ந்த ஒரு சிறு அமைப்பினரால் இன்று வெற்றி கரமாக நடதப்பகிறது.....இந்த சிறு குழு என்பது எதிர் களத்தில் கனடாவில் வாழும் எங்கள் ஊர்கார் என்று சொல்லும் அளவிற்க்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் ....நாங்கள் தேசம் விடுதலை என்று வெட்டியாக கதைப்பம் ஆனால் பங்கு பற்ற வேண்டும் என்றால் உடனே விலகி கொள்ளுவம்....அல்லது இவ்வாறன நல்ல விஷயம் நடந்தால் விதண்டாவாதம் கதைப்பம் அது எங்கள் உறவனுக்கு உள்ள ஒரு கொடை எதுவுமே பண்ண மாட்டம் எவனாவது சிந்தித்து இவ்வாறன நல்ல வியங்களை செய்தல் விதண்டாவாதம் தான்....

நாம் எப்போதும்இருட்டு இருட்டு என்று சொல்வதை விடுத்தது ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் எவ்வளவு வெளிச்சம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும் ....அந்த விளக்கை ஏற்ற எவரும் முன் வருவது இல்லை ஒரு வேலை உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் இருக்கலாம் இப்பொழுது கிடைத்து இருக்கிறது சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் அதில் கிடைக்கப்போகும் நன்மை அதிகம்......கனடாவில் இருப்பவர்கள் எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள் அம்மன் கோவிலடியில் நின்று பார்த்தல் தெரியும் எதனை மாணவர்கள் அந்த விதியால் போகிறார்கள் என்பதை உங்களுக்கே சந்தோசமாய் இருக்கும் அட நாமலும் எதாவது கொடுக்கணும் என்று.....

ஒரு முறை பெற்றோர சந்திப்பு ஒன்று இடம்பெறும் போது ஒரு தாய் சொன்னார் தம்பி எனக்கு நான்கு பிள்ளைகள் வெளில படிக்க விர்றது என்றால் 2000 வேணும் தம்பி அத நினது பார்க்கையில பிள்ளையளுக்கு படிப்பே தேவை இல்லன்னு தான் தோணும் அனா இந்த கல்வி நிலையதள இண்டைக்கு என்ற எல்லா பிள்ளை களும் இங்க படிக்கிரங்கள் என்ற முதபிள்ளை இங்க படித்து இப்ப ol  பாஸ் பண்ணிட்டுது இத தொடந்து செய்யுங்கோ அப்பத்தான் என்ன மாதிரி வருமைபட்டவயலின் பிள்ளை கள் படிக்க முடியும் என்றா அங்க நின்ற எல்லோர் மனங்களும் குளிர்ந்து போனது...இந்த புண்ணியம் அந்த குழுவினரை சாரும் பலவருடங்களாக வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு ஊருக்கு வரும் போது....அவர்கள் அடைகின்ற சந்தோசம் பெரியது.......உங்களால் ஒரு சிறு பணம் எத்தனையோ மாணவர்களை உருவாக்கப்போகின்றது நினைத்து பாருங்கள்.....

ஒவ்வொரு இனமும் தேசமும் அதன் நிலம் மற்றும் மொழியை  அடைமொழியை கொடுத்தே பெருமைப்படுத்துகின்றன, “தாய் மண்”, “தாய் மொழி” என்றுசொல்வார்கள்  அது நிலைக்க வேண்டுமானால் இவ்வாறன தானங்கள் முக்கியம் பெறுகின்றது

ஊரை உறவை பிரித்தவர்கள் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரித்தான் குரலால் .....செயலால் .....சாயல்களால் நாம் பிரியங்களையும் பிரிவுகளையும் நிரப்பிக்கொண்டு இருக்கிறோம்.......

.உண்மைதான் உங்களின் உறவுகர்ப்பிள்ளகளின் கல்விக்கான உதவி இது நான் கொடுப்பது எனது ஊருக்கும் ஊரவுக்கும் என்பதுதான் உண்மை என் அன்ரவின் என் பெரியப்பாவின் பிள்ளை பெரிய படிப்பு படித்தால் அது எங்களுக்கு பெருமை தானே

அடிப்பை யான கல்வியை கொடுக்காத நாங்கள் இன்று (மருத்துவம் ,வர்த்தகம் ,பொறியியல் ,)ஊக்கத்தொகை என்று நோட்டிஸ் அடிக்கிறம் ஆரம்பக்கல்வியை கொடுக்க முடியாதவர்களால் எங்கே இது சாத்தியம் ஆகும்...

அதை விடுத்தது நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுகின்றோம்...உண்மையில் நாட்டின் வளர்ச்சியை எங்கள் ஊரின் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கிறோம் அனைவருக்குமான வளர்ச்சியும் அதுவே என்பது பெருமைப்பட வேண்டிய விடயம்.....நாட்டின் தேசியத்தின் வளர்ச்சி பற்றி பேசுபவர்களே சற்று சிந்தயுங்கள்

நிங்களும் நானும் இந்த பூமிக்கு வந்து போகும் புச்சிகள் ...நாம் வாழும் காலத்தில் இந்த நாம் பிறந்த ஊருக்காக என்ன செய்துள்ளோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் இவ்வாறான செயட்ப்படுகள் சந்ததி கடந்தும் நம்மை போற்றும்

உதரணமாக பெரியவர்கள் சொல்வார்கள் இந்த உலகத்தில் ஒவ்வன்ரும் கடனாகத்தான் கொடுக்கப்படுகின்றது அது திரும்ப கிடக்கும் என்ற நம்பிக்கையில் என்று அது போலவே கல்வியும் எமது ஊருக்கு பெருமை சேர்க்கும் போது நாமும் தம்பட்டம் அடித்து கொள்ளலால்ம் நான் தான்
படிக்கவைத்தான் என்று..

நின்று நிதானமாக யோசித்து ஒரு வேலையை செய்தால் கல்லை கூட சிப்பம் அக்காலம் என்பார்கள்......யோசித்து பாருங்கள் எங்கள் ஊரின் மகத்தான சாதனையை எல்லோரும் ஒன்றுபட்டு இதை செய்வோம் அனால் எதிர் காலத்தில் தீவுப்பகுதியில் எமது புளியங்கூடல் நல்ல சந்ததிகளையும் நல்லசமுகதையும் உருவாக்கிவிடும்...இல்லையில் இபோ இருக்கும் பழைய சந்ததிபோல் உருவாக்கி விடும்....எதிகாலத்தில் நல்ல சமுதாயம் எங்கள் ஊரில் உதிக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனது வைத்தால் முடியும்

“பிச்சை புகினும் கற்க நன்றே” என்றார் ஒளவையார்
கற்றவரக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றனர்; முற்றும் அறிந்தவர் ஆக உற்றவர் எம் ஊர்தனில் பிறந்தவர் யாவரும் கற்றவராயினும் இன்னுமின்னும்வழிவகை அற்றவராக வாழ்பவர் தம்மை கற்றவராக்கி சற்று மகிழ்வோம்....
கல்வி, தனிமனிதன் ஆனாலும் சரி , சமூகமானாலும் சரி, முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைப்பது இதுதான்.....
100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக்

 காட்டுவார்கள் 
அதை விடுத்தது ஒற்றுமையை  இருப்பவர்களை கொண்டு மிகசிறப்பாக இது செய்யப்படுகிறது எனவே இது தொடந்தும் முன்னெடுத்து செல்பதுக்கு இன்னும் எங்களின் ஊரில் அக்கறை உள்ளவர்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே எம் எல்லோரதும் ஆதங்கம்.....இன்று தொடந்து இந்த செயட்ப்பட்டுக்கு உதவி வருபவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.....தொடந்தும் செயட்ப்படுவதட்க்கும் வாழ்த்துக்கள்...இதற்க்கு உதவி செய்ய விரும்புவோர் தொடர்புகளை ஏற்ப்படுத்தி கொள்ளுங்கள் 

1 comment:

  1. இவைதான் காலத்தின் தேவை.முதலில் புளியங்கூடல் மாணவச் சந்ததியினர் கல்வியறிவு பெறட்டும்.பட்டதாரிகள் நூற்றுக்கனக்கில் உருவாகட்டும்.இப்படியானவர்களால்த்தான் கிராமம் வளம் பெறும்.அர்ப்பணிப்புடன் செயற்ப்படின் புலம்பெயர் கூடலூர் மக்கள் நிறைவேற்றிக்காட்டலாம்.இவை பற்றிக் கலந்து பேசுவதே உண்மையான விசுவாசமான மண்ணின் மைந்தர்கள் செய்ய வேண்டிய காலக்கடமை.தொடரட்டும் உம் பணிகள்.

    ReplyDelete