புளியங்கூடல் ஒன்றுகூடலின் நினைவுகள்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி
சிறந்தனவே---------- --என்பதற்கு ஏற்ப எம்மண்ணை எண்ணாதவர்கள்
இங்கில்லை.
பலமான வரலாற்று தொன்மைமிக்க எமதூர். தமிழர் வாழ்வில் கடந்து போன கசப்பான
அனுபவங்களின்பின் இன்று பற்பல முனைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும்
அவை எமதூரின் தேவைகளை முழுமையாக தீர்த்து வைக்கவேண்டும்.என்பது எமது
எல்லோரது கடமையும் ஆகும் நான் பங்கு கொண்ட முதலாவது கூட்ட தொடர் இது எமது
ஊரின் பல கசப்பான அனுபவங்களை விடுத்தது இதில் கலந்து கொண்டேன் பொதுவாக
இங்கு உள்ளவர்களும் சரி அங்கு உள்ளவர்களும் சரி எல்லோரும் ஊரின் நன்மைக்காக
படுபாபவர்கள் என்பதில் மற்று கருத்துக்கள் இருபது இல்லைஊரும்,
உறவும் என்றும் எம் எண்ணத்தில்
இருந்து அழிக்கமுடியாத ஒன்று என நான் திடமாகக் கூறுவேன். இதனால் ஊரில்
வாழ்ந்தவர்கள்,வாழ்பவர்கள் எல்லோரையும் சமமாக எந்தவித தகுதி
எற்றத்தாழ்வுகள் இல்லாமல் எமது ஊரின் வளர்ச்சிக்கும்,பொருளாதார
மேம்பாட்டிற்கும் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ தம்மை அற்பணித்த மக்களை நாம்
வாழும்காலத்தில் நினைவு படுத்தி பார்க்க வேண்டியது அவசியம் அதில் எவர்கள்
என்று தேடும் பொது வெற்றிடமே குறிப்பாக ஈழத்தின் இன்றைய சிதைவிட்க்கு
பின்னர் புலம்பெயர் தேசங்களில் அடைக்கலம் தேடியவர்கள் ஏராளம் அவர்கள்
ஒவ்வருவர் மனதிலும் அவர்கள் பிறந்த ஊர நினைவில் வரும் இந்த திக்கு திசை
தெரியாது அந்நிய நாட்டில் அனாதைகளாக வாழும் எங்களின் உறவுகளை
ஒன்றுசேர்க்கும் இவ்வாறான நினகல்வுகள் மிகவும் போற்றத்தக்கது நாம் இழந்து
போனவற்றை மிட்பதட்க்கும் எங்களின் உணர்வுகளை சொந்தங்களோடு பகிர்ந்து
கொள்வதற்க்கும் இது ஒரு புதிய வழி சமைக்கிறது எனலாம் இதில் குறைபாடுகள்
இருந்தாலும் இவ்வாறான நிறைவான சம்பவங்கள் நிவர்த்தி செய்து கொள்கிறது
பொதுவாக எமது கிராமத்தின் அபிவிருத்தி நோக்கிய இந்த பயணம் வேறு கூட்ட
தொடருடன் முடிவடைந்து அடுத்த கூட்ட தொடரில் ஆரம்பம் அககக்கூடாது இதன்
செயட்படு தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு இன்று புளியங்கூடலில் இலவச
கல்வி நிறுவகம் இயங்கி வருகின்றது இது இந்த புளியங்கூடல் சங்கத்தினால்
நடத்தப்படவில்லை ஒரு குறிப்பிட்ட அங்கத்தவர்களை கொண்ட வர்களால் இது
நடத்தப்படுகிறது அப்போ இந்த ஒன்றியத்தின் சேவைகள் தான் என்ன ஒவ்வரு
வருடமும் கூட்டம் போடுவதா நான் அதன் தலைவருடன் இதுபற்றி நிறைய விடயங்களை
பேசும்போது அவர் சொன்னது வன்னியின் இறுதி கட்ட போரில் பதித்த மக்களுக்கு பண
உதவியினை மேற்கொண்டது ,சுனாமி நிவரனதிட்க்கு உதவியது போன்றவைதான்
உண்மையில் எனக்கு இதுவரை தெரியாது இவ்வாறான அமைப்பு ஒன்று இயங்கிவருவது என்
எனில் ஊரின் அபிவிருத்திக்காக என்ன செய்து உள்ளீர்கள் என்பது கேள்விக்கு
உரியதுதான் இன்று எங்களின் புளியங்கூடலில் தேவைகள்
இயந்திரமான இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் வருடத்தில் ஒருநாள் சந்திப்பதில் உள்ள ஆனந்தத்தினை பாருங்கள்

1 சிறந்த கல்வி (அது
தனிப்பட்ட வர்களின்னால் சிறப்பாக இடம்பெற்று வருகிறது )
2 சிறந்த சனசமுக நிலையம் (இது கட்டப்பட்டு பூர்த்திசெய்ய முடியாமல்
நிற்கிறது )
3 நல்ல நூல் நிலையம் (ஆரம்பத்தில் 1970 80 காலப்பகுதியில் நல்ல
நூல்நிலையம் இருந்ததாக கேள்வி )
4 நல்ல விளையாட்டு அரங்கம் அமைக்கப்படல்
வேண்டும் (அன்று கூட்டத்தில் என்னைசந்தித ஒரு பெரியவர் சொன்னார் தம்பி
நாங்கள் எல்லாம் அந்த நாளையில என்ன விளையாட்டு எல்லாத்திலையும் நாங்க தான்
தம்பி சம்பியன் எண்டு எனக்கு பத்திக்கொண்டு கொண்டு வந்தது ஒரு சங்கம் இதனை
உறுப்பினர்கள் ஒரு விளையாட்டு திடல் அமைக்கமுடியில்ல இவைக்கு என்னத்துக்கு
....)
உண்மையில் ஒருகிராமத்தில் நல்ல ஒழுக்கம் நல்ல பண்பு அறிவு வளர்வது
கல்விக்குடங்களில் மட்டும் அல்ல அது வாசகசலைகளில்தொடக்கி நல்ல விளையாட்டு
மைதானங்களில் தான் என்பது எனது கருது அனால் எமது ஊரில் சிறப்பாக
அமைக்கப்படவில்லை என்பது வருத்தமே
5 ஈழத்தின் சிதைவுகள் வடுக்கள் என்றுமே
நினைவில் இருபதட்க்கு சாட்சி விதவைகள்
எமது ஊரில் இருக்கிறார்கள்
இவர்களுக்கு மாதாந்த அல்லது வருட கொடுப்பனவுகள் அல்லது இவர்களின் அறிவுக்கு
தகுந்த மாதிரி சுய வேலைவைப்புக்களை ஏற்ப்படுத்தி கொடுப்பது கட்டாயம் ஆனது
(தைக்க தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் மெசின் வங்க பணம் இல்லை )
6
சுயவேலைவாய்ப்பு
எதனை படித்து வேலையில்லாத எமது ஊர பசங்கள் இருக்கங்கள்
அவர்களிற்க்கு சுயவேளைவைப்புகளை ஏற்படுத்தி கொடுக்க எவரும் முன் வருவது
இல்லை அடுத்தது மிகமுக்கியமான ஒரு தேவை எமது கிராமத்துக்கு உள்ளது
நீர்
குடிநீர் பிரசனை
கொடைகலங்களில் எங்களின் ஊர்களில் மிகப்பெரிய பிரசனை இது
அநேகமான வெளிநாட்டு காரர்களுக்கு புரிவதில்லை என் எனில் நிங்கள் உருக்கு
போகும்போது போத்தல் வங்கி போவதால் (நான் சொன்னது தன்னிபோட்டல் ) சாட்டியில்
இருந்து குழாய் முலம் வேலணை வரை தண்ணி வருகிறது நாங்கள் கொஞ்ச காசு
செலவழித்தல் அதை எமது ஊருக்கும் கொண்டுவரலாம் இதை எவரும் கண்டு கொண்டதாக
தெரியவில்லை எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற பிரசனைகளை தீர்த்து விட்டு
பேசல்லாம்
அடுத்தது நான் கூடத்தின் இறுதி தருவையில் தான் போனேன்
இருந்தாலும் இல விடயங்கள் என் மனதில் உறுத்தலாக பட்டது அதாவது இவ்வாறான
நிகழ்வுகள் எங்களின் விடுபட்ட கலாச்சாரம் சிதைந்து போகும் எங்களின் மொழி
அழிந்து கொண்டு இருக்கும் எங்களின் பண்பாடு எல்லாவற்றையும் மீட்பது தான்
இதன் நோக்கங்கள் அனால் அதன் சாத்திய கூறுகள் தென்படவில்லை உதாரணமாக
ஒரு
யப்பனியனும் இன்னொரு யப்பனியனும் சந்தித்து கொண்டால் அவர்கள் தங்களின்
மொழிகளில் பேசிக்கொள்வார்கள் இரண்டு பிரான்ஸ் மொழிக்காரன் சந்தித்தால்
அவன்தான் மொழியில் பேசுகிறான் ஏன் சிங்களவன் சிங்களவன் சந்தித்து கொள்ளும்
பொது சிங்களத்தில் தான் பேசுகிறான் உங்களால் மட்டும் உங்களின் குழந்தைகளால்
மட்டும் அங்கிலம் பேசதிரிகிறது தமிழ் தெரியாது ஈழம் எனபது உங்களின்
காலங்களுக்கு அல்ல அது அவர்களின் காலன்களுக்குமனது உங்களின் பிள்ளைக்கு
தமிழ் தெரியாமல் நிங்கள் ஈழம் பற்றியும் பிறந்த மண் பற்றியும் பேசி பலன்
இல்லை இது மாற வேண்டும் ஒழுங்கு செய்யப்படுகின்ற விளையாட்டுக்கள் அதை பிரதி
பலிப்பனவாக இருக்கவேண்டும்
(ஒரு கட்டுரை போட்டி ,ஒரு கவிதை போட்டி ,ஒரு
பேச்சு போட்டி ,ஏன் ஒரு பட்டு போட்டி ,)இதில் வேடிக்கை சங்கித கதிரைக்கும்
ஆங்கிலத்தில் தான் பட்டு உங்கள் பிள்ளை அங்கிலம் பேசினால் உங்களுக்கு
பெருமை அங்கிலம் என்பது மொழி அது அறிவு அல்ல ,அதை புரிந்து கொள்ள வேண்டும்
அடுத்தமுறை சிலவேளை மாறலாம் மாறினால் வரவேற்க்க தக்கது . கனடாவில் உள்ள
மற்றைய ஊர்ச்சங்கங்கள் ஏற்கனவே பற்பல வேலைத்திட்டங்களை செய்து
முடிந்துள்ளன. எமக்கொரு வழிகாட்டலாக அவை அமைந்துள்ளன. எனவே நாமும் எமது
இயலுமான வளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகவும் பிரயோசனமான ஒரு
வேலைத்திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இது எமது கடமையாகும். நிச்சயம் அக இதில் இளையோர் எங்களின் பங்களிப்பும் இருக்கும்
“அடம்பன்
கொடியும் திரண்டால் மிடுக்கு.”-----------------
“பிச்சை புகினும் கற்க நன்றே” என்றார் ஒளவையார் இதை பின்பற்றி குறிப்பிட்ட
சிலரால் மட்டும் இயங்கிவரும் புளியங்கூடல் மகாமாரி கல்வி நிலையம்
தொடந்தும் செயற்ப்பட எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
கற்றவரக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றனர்; முற்றும் அறிந்தவர் ஆக
உற்றவர் எம் ஊர்தனில் பிறந்தவர் யாவரும் கற்றவராயினும் இன்னுமின்னும்வழிவகை
அற்றவராக வாழ்பவர் தம்மை கற்றவராக்கி சற்று மகிழ்வோம்
குறிப்பு ,இக்கட்டுரைக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் மட்டும் சொந்தக்காரன் என்னை சார்ந்தவர்கள் அல்ல
Nice keep it up
ReplyDelete