Saturday, 7 July 2012

வெத்திலையே எங்களின் சின்னம் தமிழனை அழிப்பதே எங்களின் எண்ணம்......

தனது நண்பனுக்கு வெட்டவந்தவரைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போதே யாழ்.நாரந்தனை வாசி கத்தியால் வெட்டி கொடுரமானமுறையில் கொலை செய்யப்பட்டார்
இக் கொலையினை புரிந்தவர் ஏற்கனவே 2 கொலைச் சம்பவங்களுடனனும் 3 மேற்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் யாழ்.ஊர்காவல் துறைப் பகுதியில் உள்ள நாரந்தனை என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் கத்திவெட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

குறித்த கொலையாளி ஊருக்குள் இருப்பவர்களை மிரட்டி பல காரியங்களை சாதித்து வருகின்றார். இவர் தொடர்பாக காவல்துறையினர்;, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஈ.பி,டி,பி கட்சி உறுப்பினர்களுக்கு ஊர் மக்கள் சார்பில் கடிதங்கள்
எழுத்தி அனைத்து மக்களின் கையெழுத்துக்களும் இடப்பட்டு அனைவரிடமும் கொடுக்கப்பட்டது. இருந்த போதும் அவர் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இவர்தொடர்ச்சியான கொலைச் சம்பவங்களையும் வாள்வவெட்டுச் சம்பவங்களையும் துணிவுடன் செய்துவருகின்றார். இதனால் அப்பகுதியில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர் கள்ள மணல் அகழ்வு, வணிகமக்களிடம் மிரட்டி பணம் பறித்தல் போன்றபல குற்ற செயல்களில் ஈடுபடுபவர் என்பதும் இவர் வங்களாவடி மற்றும் உர்காவத்துறை போன்ற இடங்களில் தன்னை ஒரு இராணுவ புலனாய்வு அளனாக காட்டி கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏற்கனவே 2009 ஆண்டு காலப்பகுதியில் இதே மாதிரி புளியங்கூடலை சேர்ந்த ஒருவர் நாரந்தனை காளிகோவிலுக்கு அருகாமையில்  வெட்டி கொலை செய்யப்பட்டது அறிந்ததே.மனிதம் செத்துவிட்ட நாட்டில் இராணுவத்தின் பேராலும் தமிழ் ஒட்டுகுழுவான தீவகத்தின் தீராத தலைவலியான epdp அமைப்பாலும் மேட்க்கொள்ளப்படுகிறது என்பது உம்மையே ஒரு கிராமத்தில் மொத்தம் 10 ,000 மக்களை கொண்ட இடத்தில குற்றவாளியை கைது செய்ய முடியாவிட்டால் என்ன சொல்வது தமிழ் மக்களிடம் கலாச்சார சீரழிவையும் வன்முறை கலாச்சாரத்தையும் திட்டமிட்டு செய்துவரும் அரசும் துரோகக்ககுளுக்களும் இது போன்ற செயல்களை உக்குவிக்கின்றன......

No comments:

Post a Comment