
இன்று ஈழமக்களின் தலைமைபீடம் இல்லாத நிலையில் யாரை நம்புவது என்பது தெரியாமல் இருந்த மக்கள் இன்று தமிழ் தேசியத்தை வெல்ல வைத்திருப்பதன் மூலம் நாம் சிங்களத்தின் அதனூடு சேர்ந்து இயங்கிய ஒட்டு குழுக்களுக்கும் அடிபணியாது அவர்கொடுக்கின்ர அற்ப சொற்ப்ப சலுகைகளுக்கு அடிபணியாது மக்கள் இன்று மிகப்பெரிய அரசியல் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள் நாங்கள் இன்னும் உணர்வோடுதான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளது
எனக்கு தெரிந்து ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட இவ்வாறு வெற்றி பெற்றது கிடையாது அது EPDP கோட்டை எனசொல்லப்பட்டது இன்று நிலைமை தலைகிழ் இன்று ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் வேண்டுதல் உரிமை என்பதுதான்
இன்று இலங்கை அரசாங்கமானது சர்வதேசத்தின் முன்னால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் கேட்பது உரிமை எங்களை நாங்கள் ஆளும் வாழ்க்கை என்பதை இப்போது சர்வதேசம் புரிந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது இலங்கையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அடைவதற்கான இராஜதந்திரசந்தர்ப்பமாகவும் வடக்கு உட்பட தமிழ்பேசும் மக்கள் தேசத்தில் இராணுவ ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் ஒழிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
இன்று வெற்றி பெற்றவர்கள் அதற்கான வழிமுறைகளை கையாண்டு எங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்
இரத்தம் சிந்தப்பட்ட மண்ணில் அதன் வடுக்கள் ஆறும் முன்னே தமிழ் மக்கள் இன்னோர் முறை எமக்கான உரிமையை சர்வதேசதிட்க்கு பறை சாற்றி உள்ளார்கள் சர்வதேசம் இந்த சந்தர்பத்தையும் தட்டி கழிக்காமல் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும்
விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என்று புறம்தள்ளி எம் மக்களையும் எம் விடுதலை போராட்டத்தையும் அழித்த உலக சமுதாயம் இம்முறை எம்மால் எம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களின் அரசியல் தலைவர்களோடு கலந்து பேசுவதில் எந்த இடர்பாடும் இருக்க போவதில்லை எனவே எமக்கான உரிமை இந்த தேர்தல் மூலம் உலக்குக்கு உணர்த்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment