
கிராமம் என்று சொன்னவுடனேயே பலருக்கு (குறிப்பாக நகரவாசிகள், கிராமத்தை விட்டு வெகுநாட்களுக்கு முன்னரே வளியேறியவர்களுக்கு) நினைவுக்கு வருவது விவசாயம் , விவசாயிகள், எல்லாம் ஏழை மக்கள்,படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள் என்பதுதான்.முன்னர் காலங்களில் அப்படிதான் இருந்திருக்கும்சில வருடங்களுக்கு முன்னர் எனது கிராமம் அதற்கான அடையாளங்களோடு தான் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை காலங்களால் பெரும் மாற்றம் கண்டுள்ளது.. கிராமம் பற்றிய பார்வையில் புரிதலில் நிறைய மாற்றங்கள் கொள்ள வேண்டியுள்ளது.
ஆரம்ப நிலை மனித இனம் உணவுக்காக நாடோடியாய் சுற்றித் திரிந்து விலங்குகளை வேட்டையாடி, தானும் விலங்குகளால் வேட்டையாடப்பட்டு அல்லலுற்று அலைந்து கடைசியாய் ஓரிடத்தில் ஒரு குழுவாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தன் உணவுத் தேவையை விவசாயத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டபோது தான் சேர்ந்து வாழக்கூடிய வழிமுறை பின்பற்றப்பட்டு இன்றைய கிராமம் என்ற பரிணாமத்தை அடைந்தது.
இந்த பூமியில் முதன் முதலாய் உருவான அமைப்பு கிராமம் தான். மக்களின் எண்ணிக்கையைப் பொருத்து அது சிறிதாகவோ பெரிதாகவோ அடையாளப்படுத்தப்பட்டது. அந்த சமூக அமைப்பில் அனைத்தும் பொதுவாய் இருந்தது ஆதி சமூகம் அமைக்கப்பட்டது முதலில் பொது உடைமை தத்துவத்தில் தான் .

ஆத்மாக்களின் கடைசி புகலிடமாய் இருந்து கொண்டிருப்பது கிராமங்கள் தான் .
இப்படி இருக்கும் எண்ணற்ற இலங்கை கிராமங்களின் வரிசையில்இலங்கை வரைபடத்தில் இன்னமும் இடம்பெறத் தகுதி பெறாத ஒரு கிராமம் தான் எனது கிராமம்.
யாழ்மாவட்டம் மாவட்டம், தீவுப்பகுதி ஊர்காவத்துறை உட்பட்ட புளியங்கூடல்கிராமம் தான் அது.
எந்த விதத்திலும் முக்கியத்துவம் பெறாத இந்த கிராமம் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை விட்டு விலகி உள் ஒடுங்கி போதிய போக்குவரத்து வசதியற்ற நிலையில் தான் இன்னமும் இருக்கிறது.

இங்கு புகையிலை மற்றும் இதர விவசாய பயிர்கள் பயிரிடப்படுகின்றது சுற்றிவர உவர் நீரினை கொண்ட ஒரு பிரதேசமாக இது விளங்குகின்றது பொதுவாக இயற்கையை மட்டும் நம்பி செய்கின்ற விவசாயம் தான் இங்கு உண்டு இது இயற்கையால் ஏமாற்றப்பட்ட இன்னலக்ளும் என் கிராமத்திற்க்கு உண்டு
எனது ஊரின் மிகச்சிறந்த எழுச்சியாக ஆலயங்களை சொல்லலாம் தீவுப்பகுதியில் புளியங்கூடல் அம்மன் ஆலயம் தல சிறப்பில் இரண்டாவது இடத்தினை பெறுகின்றது
அதனைசுற்றி பிள்ளையார் கோவில் வைரவர் கோவில் போன்றனவும் உள்ளன
இதே நேரம் தீவுப்பகுதியில் சிறந்த கல்வி கொண்டபிரதேசமாக வேலணைக்கு அடுத்தபடியாக எமது கிராமத்தினை சான்றோர்கள் சொல்வர்....இது இன்றைய சூழ்நிலையில் கேள்விக்குறியாக உருவாகி கொண்டு இருப்பதே வேதனையானது...
இலங்கையின் விவசாய கிராமங்கள் அந்தமக்களின் ஒற்றுமையான பங்களிப்பின் மூலம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளன இன்றைய நவீனத்துவமும் கல்வி வளர்ச்சியும் அவற்றினை மேம்படுத்தி உள்ளன ஆனால் எமது கிராமத்திற்க்கு மட்டும் அது பொருத்தமானதாக அமையவில்லை என்பதே கவலை அளிக்கிறது
எனது மண்ணில் பிறந்தவர்கள் அதிகமானவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களின் போதுமான சிறுது பங்களிப்பு இருந்தால் எமது கிராமம் ஒளிபெற்ற தேசமாக மாறிவிடும் இதற்க்கு இலங்கையின் எத்தனையோ கிராமங்கள்உதாரணமாக சொல்லலாம்
இன்று சமூக அறிவின் மட்டம் தொடர்ச்சியாகவும், மிக வேகமாகவும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. விவாதங்கள், விவாதத் தளங்கள் எங்கும் இதே கதிதான். சமூக நேசிப்புள்ள மக்கள் இளைஞர்கள் மற்றம் கண்டு வருகின்றனர் சமூகத்தை புரிந்துகொள்ளும் முயற்சிகள் முற்றாகவே சிறுமைப்படுத்தப்படுகின்றது. சமூகத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆற்றல் உள்ள புரட்சிகர சமூக அறிவு கிடையாது. இதற்கு இசைவான வகையில் சமுகத்தில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களும் கரணம் ஆகி விடுகின்றது இது மாற்றம் இப்பொழுது அவசியம் ஆகின்றது உங்களால் எனது மண் என் மக்கள் என்று சொல்லுவதற்க்கு மிகச்சிறந்த ஒரு சமுகத்தை உருவக்குவதட்க்கு நிங்கள் கடமைப்பட்டு உள்ளீர்கள்...
உதாரணமாக சொல்லப்போனால் எமது ஊரில் கல்வி கற்ற எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் தங்களின் கல்வியினை முடித்து கொண்டு வேலை செய்பவர்கள் அகவும் இருக்கிறார்கள் ஆனால் நான் அறிந்த மட்டில் இவர்கள் புளியங்கூடலில் எந்தவிதமான சேவைகளையும் வழங்கியதாக தெரியவில்லை இவர்கள் நினைத்தால் மாதம் ஒரு தடவை இலவச மருதுவமுகமினை நடத்தலாம் ஏன் முன்வரவில்லை பட்டதாரி ஆசிரியர்கள் வேறு துறைகளில் பரிச்சியம் உடையவர்கள் எவரும் தங்களின் பாதைகளை இன்றைய இளைய சமுதயதிட்க்கு கட்டவில்லை என்பதே வேதனையான விடயமாக இருக்கிறது
அதே போல் ஆலயங்கள் கிராமசேவைகளில் தங்களை ஈடுபத்த முன்வரவேண்டும் இருள் நிறைந்த கிராமம் வெளிச்சம் அடையும் எமது ஊரில் இருந்து இலங்கையின் கொடிய யுத்தம் இனமோதல்களால் தங்களின் முகவரிகளை தொலைத்து மண்வாசனை மறந்து அந்நிய தேசங்களில் முகங்களை இழந்து வாழ்பவர்கள் தங்களின் முகவரியினை மீண்டும் மண்மீது பதிக்க விரும்புகின்றனர் ஆனால் பலபேர் அவ்வாறு இல்லை மாதவருவையில் ஒரு 10 டொலரைகூட கொடுபதட்க்கு பலவாறு யோசனை செய்கின்றனர் பலபேர் தங்கள் பிறந்த ஊர்களை மறந்துவிட்டனர் ஆனால் முகநுல்களில் தங்களின் அடையாளங்களை வெட்டியான பேச்சுகள் மூலம் காட்டிவருகின்றனர்
அல்லும் பகலும் நெருக்கித் தள்ளும் வாழ்வில் சுயநலத்தினால் உந்திப்பட்டு வாழ்ந்தால் நமக்கும் மந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? பின்னொரு நாளில் நான் இப்படிக் கழித்தேன் என்று நினைவு கூர்வதற்கு மந்தைகளிடம் ஏதுமில்லை. நானிலிருந்து விடுபட்டு நாமுக்காக வாழ்வதே வாழ்க்கையின் முழுமையை ஒளியூட்டி உணர்த்துகிறது. இது மதவாதிகள் கூறும் ஆன்ம விடுதலை என்ற சொர்க்கத்தின் இன்பத் திறவுகோலல்ல. சமூகவிடுதலைக்காக தன்னை இழந்து தம்மை மீட்கும் மனிதகுலத்தின் ஆகப்பெரும் கனவு. இந்த கனவிட்க்கு நனவை கொடுக்கின்றபோது எனது கிராமத்தின் அடுத்த தலைமுறையில் வரும் மனிதர்கள் இந்த இருட்டு குகைகளின் தடையை நம் ஒளியால் கடக்கிறார்கள்.
அதேபோல்உண்மையில் மேடைப் பேச்சுக்களில் மற்றும் முகனுள் பக்கத்தில் `மானிடத்தை நேசிக்கிறோம்' என கதையளப்பவர்கள் தம்மை மனிதநேயம் மிக்கவர்களாக இனங்காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். இவர்கள் சொற்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்விலும் மனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அப்போதுதான் ஒன்றுபட்ட ஒரு சமுக அமைப்பை உருவாக்க முடியும்
இப்பொழுது சில சக்திகளால் கிராமம் துளிர் விடதொடங்கி உள்ளது இலவசகல்வி நிலையம் நடத்தப்படுகிறது நல்ல படித்த சந்ததி உருவாக்கப்படுகிறது இநோருநாளில் எனது கிராமம் நிமிர்ந்து நிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இருக்கப்போவதில்லை ஆனால் இதன் வேகம் வளர்ச்சி என்பது குறைவானது போதிய மூலதனம் இல்லாததே காரணம் ஆகின்றது ஊரின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள்
சமுகத்தின் மீது பற்று கொண்டவர்கள் முன்வரவேண்டும்
சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், வழிகாட்டும் பொது விவாதங்களும் அவசியமானதாக உள்ளது. சமூகம் தன்னைத்தான் அமைப்பாக்குவதன் மூலம்தான், இவை போன்றவைகளை சரியாக முன்னெடுத்து வழிநடத்த முடியும்.
ஒன்றுபடுவோம்... திட்டமிடுவோம்... செயல்படுவோம்...
No comments:
Post a Comment