Thursday, 30 May 2013

புன்னகையைக் கடந்து, மனதின் வலிமைகளைத் தாண்டி.... 
கேள்விகளில் கசிந்த... அந்தத் துயர்படிந்த ஏக்கம், அங்குள்ள சுவர்களிலும் மரங்களிலும் சருகுகளிலும் பட்டுப் பரவி, 
ஒரு காலத்தை மீட்டும் மெல்லிய இசையென இன்னமும் கேட்டபடியே இருக்கிறது...! என் இதயத்தில் 
எந்த தொலைதுரம் போனாலும் சுடச் சுட அம்மா வடித்த 
சுடு சாதமும் 
பொரியலும் வறுவலும் 
தொட்டுக் கொள்ள 
துவையலுமாய் 
சுவையும் மணமுமாய் 
அறுசுவையாய் நகர்ந்த என் காலம் நிலவின் ஒளியில் 
ஒய்யாரமாய் அமர்ந்து 
உடன் பிறப்புகளுடன் 
ஓராயிரம் அளந்து...எங்கள் காட்டு வைரவர் கோயில் 
கிளாக்காய்....அரைகுறையாய் 
காய்ந்திருந்த பனங்கிழங்கும் 
நினைவினிலே வந்து 
பசி கிளப்ப 
பள்ளிக் கூட மணியும் 
பார்த்து ஒலிக்க 
துள்ளியெழுந்து ஓடுகையிலும்... ஆ எப்படி அந்த நினைவுகளை மறக்கமுடியும்.....
என் ஊரின் நினைவுகளை இன்னமும் என் கூடலுரின் பனையோலை சருகு சத்தம் கேட்டபடியே இருக்கிறது என் மனதில் 

No comments:

Post a Comment